தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
- வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
- தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தண்ணீர் தெளிந்த நிலையில் சென்றது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் அதிக அளவில் இருகரையும் தொட்டு செல்கிறது.
இந்த நிலையில் பாகூரில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் பாகூர் பகுதி 21 ஏரிகளில் பாகூர் உள்பட 18 ஏரிகள் நிரம்பியது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தேரி கொமந்தான்மேடு தடுப்பணை வழியாக யாரும் செல்லாத வகையில் போலீசார் பேரிகார்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன் பிடித்தவர்களை போலீசார் எச்சரிக்கை அனுப்பி வைத்தனர்.