2-வது நாளாக உணவு - அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது.
- மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது.
புதுச்சேரி:
மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது. இதனால் உப்பளம் தொகுதியை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடி நேற்று முன் தினம் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். நேற்று 2-வது நாளாக தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் குடிசை வீடுகளுக்கு தார்பாய் போன்ற நிவாரண உதவிகளையும் அளித்தார்.
உடன் அவைத் தலைவர் ரவி, திமுக பிரமுகர் நோயல், மாநில இளைஞரணி ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன், மணிகண்டன், ஆறுமுகம், மாயவன், ஜெயசீலன், ரவி, மணிமாறன் மற்றும் ராகேஷ் கௌதமன், கழக சகோதரர்கள் ரகுமான், மோரிஸ், லாரன்ஸ், சிரஞ்சீவி, மதி, சித்தார்த்தன், திருநாவுக்கரசு, சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.