தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்
- புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.
- பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை முதலி யார்பேட்டை விடுதலை நகரில் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் குழு சார்பில் கடலூர் ரோடு சாலை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் செடல் குத்திக்கொண்டு பால்குடம் எடுத்துக்கொண்டு கடலூர் ரோடு, உழந்தைக் கீழப்பாளையம் புவன்கரே வீதி வழியாக விடுதலை நகர் வலம்புரி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. செடல் குத்துதல் மற்றும் பால்குட ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களோடு கலந்து கொண்டனர்.
பாரதீய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர் நிறுவனருமான வெற்றிச்செல்வம் தலைமை யில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இதில் ரிப்லேக்ஸ் டிவைன் பயோ மெடிக்கல் கேர் பாத சிகிச்சை மருத்துவ மைய நிர்வாக இயக்குனர் டாக்டர் கருணாகரன்- ஜெயலட்சுமி தலைமையில் டாக்டர்கள் புகழேந்தி, முனியப்பன், வக்கீல் நவரோஜ், செந்தில்குமார், கெஸ்பர், கஜலட்சுமி, மங்கையர்க்கரசி ஸ்ரீ அரவிந்த், கவுதம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், கண்ணையன், ராமலிங்கம், ரங்கநாதன், பச்சையப்பன், மகாலிங்கம், மதன் ,சரவணன், பொன்னுசாமி, சங்கர், பிரதாப், செல்வகணபதி, ஜெயமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தைப்பூச விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.