வெளி மாநில வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
- புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
- புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது.
புதுச்சேரி:
புதுவை ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் ராம்முனுசாமி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பண்டிகைக்காலங்களில் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவை திருமண மண்டபங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நபர்களால் புதுவை மக்களை நம்பி ஆண்டுமுழுதும் வியாபாரம் செய்யும் புதுவை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் புதுவை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து, புதுவைக்கு வரி ஈட்டித்தரும் புதுவை வணிகர்களின் வியாபாரம் அதிக அளவில் பாதிக்கப்படுவது வருந்தத்த க்கது. பண்டிகைகாலங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் கடைவிரிக்கும் நிறுவனங்கள் தனிநபர்களின் துணிவகைகள் மற்றும் இதரபொருட்கள் பகட்டாக இருந்தாலும், பொருட்களின் தரம் மலிவானதாக உள்ளது.
பயன்படுத்திய சில நாட்களிலேயே அவற்றின் சாயம் வெளுக்கும்போது, முறையிட அவர்களின் கடை இருப்பதில்லை. வெகுசில நாட்களில் அவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிடுகின்றனர். இதனால் நமது மாநில மக்கள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை இழந்து, ஏமாற்றமடைந்து நிற்கும் நிலை ஆண்டுதோறும் தொடர்கதையாகி வருகிறது.
எனவே ஆண்டு முழுவதும் புதுவை மக்களை நம்பி புதுவை மக்களால் வணிகம் செய்துவரும் வியாபாரி களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிமாநில வியாபாரி களுக்கு தடைவிதித்து புதுவை வியாபாரிகளின் வாழ்வாதாரம் சிறக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறினார்.