புதுச்சேரி

அரசு பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள், சீருடை மற்றும் தையல் கூலியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வழங்கினார்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

Published On 2023-05-15 09:36 GMT   |   Update On 2023-05-15 09:36 GMT
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் கடந்த கால ங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சைக்கிள்களை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மங்கலம் தொகுதி கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறையின் மூலம் சைக்கிள், கல்வி துறையின் மூலம் சீருடை மற்றும் தையல் கூலி ரூ.400 ஆகியவற்றை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் குமரன், இணை இயக்குனர் சுகந்தி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் சங்கர், பள்ளி முதல்வர் கேஷோவ், பள்ளி தலைமை ஆசிரியர் தனராசு, ஆசிரியர்கள் அமுதன், சுப்பிரமணியம், முரளிதரன், ஆதி, சுபசரவணன் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News