புதுச்சேரி

கோப்பு படம்.

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் -ஓம்சக்தி சேகர் கோரிக்கை

Published On 2022-11-14 07:05 GMT   |   Update On 2022-11-14 07:05 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக ஏற்கனவே கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 1-ந் தேதி புதுவை விடுதலை தினத்தன்று மேலும் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்காக படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர். வாய்ப்பு உள்ளவர்கள் இதற்காக பயிற்சி மையங்களை அணுகி பல்வேறு வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு ஆவதால் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை எளிய மக்கள் இது போன்ற தேர்வுகளுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளனர். மேலும் நீண்ட நாட்களாக கனவாக இருந்த அரசு வேலை வாய்ப்பு என்பது கனவாகி போய் விடுமோ என்ற எண்ணமும் இவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே முதல்- அமைச்சர் அரசின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலன் கருதி அரசின் சார்பில் இலவச பயிற்சி மையங்களை அமைத்து தர வேண்டும். மேலும் அரசு ஊழியர்களும் எழை-எளியோருக்கு பயிற்சி தர தகுதியானவர்கள் ஆவார்கள். அவர்களைக் கொண்டும் பயிற்சி வகுப்பில் எடுக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசின் எண்ணம் முழுமையான அளவில் நிறைவேறும்.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News