450 கிலோ காகித தாளில் விநாயகர் சிலை
- இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.
- 15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்திவிழா நாடு முழுவதும் 18-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனை ஒட்டி வீடுகளிலும் வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். புதுவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் ஆண்டுதோறும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் புதுவையில் நகரம் மற்றும் கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளை விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.
புதுவை திலாசுப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலையை செய்து வைக்க திட்டமிட்டனர். இதற்காக இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.
அவர் ரசாயன கலப்பில்லாமல் காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.
இதனை தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களிடம் 450 கிலோ காகித தாள்களை சேகரித்தனர். 200 கிலோ பசை கொண்டு 4 மாதங்களாக விநாயகர் சிலையை மாண–வர்களும், இளைஞர்களும் உருவாக்கி னர். மூங்கில் குச்சிகளை வைத்து காகிதங்களை அதனுடன் சுற்றி விநாயகர் கிதார் வாசிப்பது போல் சிலையை உருவாக்கியு ள்ளனர். விநாயகர் சிலைகள் ரசாயன கலப்புடன் கடலில் கரைக்கப்படும் போது கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த காகித விநா–யகரை உருவாக்கியுள்ளதாக நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.