ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது
- மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.
- வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கடந்த மார்ச் 26-ம் தேதி வெடிகுண்டு வீசியும் அறிவாளர்கள் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தனியார் பேக்கரி கடையில் நின்றிருந்த அவரை பிரபல ரவுடி நித்தியானந்தம் தலைமையிலான கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவத்தை வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கோர்ட்டில் சரண்யடைந்த நித்தியானந்தம் கொம்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த சங்கர் என்கிற சிவசங்கர், கோர்க்காடு ஏரிக்கரை வீதி கார்த்தி என்கிற கார்த்திகேயன் (வயது 23), அரியாங்குப்பம் தீர்த்தக்குளம் வீதி மாஞ்சாலை சேது என்கிற விக்னேஷ் (வயது 26), கடலூர் கிளிஞ்சிகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதாப் (வயது 24), கோர்க்காடு அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜா (வயது 23), தனத்துமேடு காமராஜர் வீதியைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 25) மற்றும் ஏழு பேர் இன மொத்த 14 பேர் இந்த வழக்கில் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது செந்தில்குமரன் கொலை வழக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்தில்குமரன் கொலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தம் மீது பல்வேறு கொலை வழக்குகள் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது.
இதேபோல் சிறையில் உள்ள நித்தியானந்தத்தின் கூட்டாளிகள் பலர் மீதும் கொடிய குற்றங்கள் புரிந்ததற்கான காவல்துறை பதிவுகள் உள்ளது. இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையிலான போலீசார் கோப்புகளை தயாரித்து வருகின்றனர்.