அரசு அதிகாரிகள் மூலம் கவர்னர் தேர்தல் பிரசாரம்
- தி.மு.க. குற்றச்சாட்டு
- அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை எதிர்க்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநில பொறுப்பு கவர்னர் தமிழிசை பா.ஜனதாவின் முழுநேர அரசியல் வாதியாக செயல்படுகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்து கிறோம் என்ற போர்வையில் அரசு அதிகாரிகளை மூலமாக தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கி உள்ளார்.
மாநில அரசின் திட்ட பயன்கள் மக்களை சென்றடைகிறதா.? என கவலைப்படாத கவர்னர் மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் அரசு எந்திரம் ஸ்தம்பித்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் புதுவைக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எத்தனை?. அதற்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்பதை பட்டியலிட முடியுமா?.
மோடி அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை திசை திருப்பவும், பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதாவை போட்டியிட வைக்கும் பணியினை விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா பிரசாரம் மூலம் முன்னின்று செய்து வருகிறார். இதற்காக அரசு எந்திரத்தை பயன்படுத்து வதும் சரியல்ல. கவர்னரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.