புதுச்சேரி
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
- சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கலித்தீர்த்தால் குப்பம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
இக் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இளங்கலை பட்டப் படிப்பில் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்தும் தமிழ் மொழியை முற்றிலுமாக நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மாணவர்களின் திடீர் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.