புதுச்சேரி

விழாவில் தமிழ்நாடு அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சண்முகம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் கல்லூரி தலைவர் தனசேகரன், இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன்.

மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2022-06-25 04:26 GMT   |   Update On 2022-06-25 04:26 GMT
  • விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
  • மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 2019-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் செந்தில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சண்முகம் கலந்துகொண்டு கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற ஒரு தங்கப்ப தக்கம் உட்பட 16 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 688 இளநிலை மாணவ-மாணவிகளுக்கும், 200 முதுநிலை மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல், தகவல் தொடர்பு துறை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News