கடல் அரிப்பை தடுக்க கிரானைட் தடுப்புச்சுவர்
- வைத்திலிங்கம் எம்.பி. மத்திய அரசிடம் மனு
- மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை, காரைக்கால் கடற்கரையோர கிராமங்களில் பல ஆண்டாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. புதுவையின் பிராதன நகர பகுதியை பாதுகாக்க 2 கி.மீ. தூரத்துக்கு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்பற கடற்கரைகளில் பாதுகாப்பு இல்லாததால் கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.
மாநில அரசு திட்டமிடல் இன்றி கடல் அரிப்புக்கு எதிரான பணிகளை ஆங்காங்கே செய்துவருவது, தவிர்க்க க்கூடிய செலவினங்களுக்கு வழி வகுக்கிறது.
மத்திய அரசு நிலையை உணர்ந்த புதுவை, காரைக்கால் கடற்கரையோர பாதுகாப்புக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரைகளை ஆய்வு செய்து மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.