புதுச்சேரி

பாரதியாரின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.

உயர் கல்விவரை தமிழில் நடத்தப்பட வேண்டும்

Published On 2023-09-10 08:06 GMT   |   Update On 2023-09-10 08:06 GMT
  • சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
  • கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாள் மற்றும் புதுவையில் தமிழ் வளர்ச்சி துறையின் தேவை குறித்த உரையரங்கம் மற்றும் கவியரங்கம் சாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

பேரவையின் துணைத்தலைவர் சுசிலா தலைமையில் பாரதியாரின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலாக்கக்குழு தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். பேரவையின் தலைவர் கவிஞர் கோ.செல்வம்,கலாச்சார புரட்சி இயக்கதலைவர் பிரான்சுவா பிரான்கிலின், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கவுசல்யா வரவேற்றார். இதனை தொடர்ந்து கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுவை மாநிலத்தில் தமிழ் வளர்ச்சி துறையை தனி இயக்குனர் தலைமையில் அமைக்க அரசு ஆணையிட வேண்டும். புதுவையை போதை இல்லாத மாநிலமாக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்று வதை கைவிட வேண்டும். புதுவை மாநிலத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News