புதுவை வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
- பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
- டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் சினிமா தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகம் உள்ளது. நேற்று விடு முறையையொட்டி வணிக வளாகத்திலும், தியேட்டர்க ளிலும் அதிக ளவு பொதுமக்கள் கூட்டம் இருந்தது.
வணிக வளாகத்தின் 3-ம் தளத்தில் உள்ள உணவு அரங்கில் பல நிறுவனங்கள் உள் ளன. இதில் பொதுமக்கள் உணவுகளை வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு 7 மணி அளவில் ஒரு உணவகத்தில் திடீரென தீ பற்றியது. அருகிலிருந்த மற்றொரு கடைக்கும் தீ பரவியது. உடனடியாக ஊழியர்கள் தீயணைப்பான்கள் உதவியுடன் தீயை அணைத்
தனர். இருப்பினும் அங்கிருந்து பொதுமக்கள் அலறிய டித்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வணிக வளாக நிறுவனத்தினர் 3-ம் தளத்திலிருந்த அனைத்து கடைகளையும் மூடி, பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். 4-ம் தளத்தில்தான் 5 தியேட்டர்கள் உள்ளன.
அங்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த வர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதன்பிறகு தீ முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டதால் மேலும் பரவும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின் மீண்டும் பொதுமக்கள் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உணவகங்கள் திறக்கப்பட்டது.
இதனால் புதுவை- கடலூர் சாலையில் பரபரப்பு நிலவியது. உருளையான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டது எப்படி.? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.