புதுச்சேரி

மங்களம் தொகுதியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை பெற அடையாள அட்டையை தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை பெற அடையாள அட்டை

Published On 2023-09-09 08:30 GMT   |   Update On 2023-09-09 08:30 GMT
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
  • இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது.

புதுச்சேரி:

குடும்ப தலைவிகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழக்கப்படுகிறது. இந்த திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உதவித் தொகையை வழங்கி திட்டத்தை விரிவுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்தது.

அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பயனாளி களுக்கு ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள்,ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News