கனரக வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க பெயர் பலகை திறப்பு
- விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.
- சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை 4 சக்கர கனரக வாகன பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.
கோரிமேடு அருகே புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலையில் பட்டானூரில் நடந்த மே தின விழாவில் சங்க தலைவர் கண்ணன், தலைவர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் கே.ஜி சங்கர், பொருளாளர் வெங்கடேஸ்வரன், முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வானூர் ஒன்றிய சேர்மன் உஷா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, வக்கீல் ராம்.முன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சங்க பெயர்பலகை திறந்து வைத்து சங்க கொடியேற்றினர். நிகழ்ச் சியில் சங்க உறுப்பினர்கள் 300 பேருக்கு இன்சூரன்ஸ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது. மே தினத்தையொட்டி கனரக வாகன பழுது பார்ப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிகள் துணைத் தலைவர்கள் பலராமன், முருகன், ஏழுமலை, துணை செயலாளர்கள் முனுசாமி, அழகப்பன், பாலமுருகன், துணை பொருளாளர் மகாராஜா, சங்க ஆலோசகர் களஞ்சியம் என்கிற வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.