அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் கோவில் திறப்பு
- தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சுவாமிக்கு புதுவையில் முதல்முறையாக அய்யா வைகுண்டர் புதுவை பதி என்ற பெயரில் அமைந்துள்ள கோவில் திருநடை திறப்பு விழா நடைபெற்றது.
பாகூரை அடுத்த அரங்கனூரில் எரமுடி அய்யனார் கோவில் அருகில் உள்ள அய்யா பதி திருநடை திறப்பு விழாவில் நேற்று பள்ளியுணர்த்தல், அய்யாவுக்கு பால் வைத்தல், உகப்படிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அய்யாவுக்கு பணிவிடை மற்றும் உச்சிபடிப்பு நிகழ்ச்சி பிற்பகலில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பவர் சோப் நிர்வாக இயக்குனர் தனபால் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாலையில் பணிவிடை மற்றும் உகபடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கடலூர், விழுப்புரம், புதுவையில் இருந்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்டர் புதுவை பதி அய்யாவழி பக்தர்கள் செய்து இருந்தனர்.