புதுச்சேரி
பயிர் காப்பீடுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
- மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது.
- பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மணிலா, கரும்பு, பருத்தி, வாழை காப்பீடு செய்யப்படுகிறது.
இயற்கை இடர்பாடுகளுக்கு காப்பீடு பிரீமியத்தொகை முழுவதை யும் அரசே செலுத்துகிறது.
ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.