புதுச்சேரி

கோப்பு படம்.

தனி கொள்கை இருக்கிறதா? முதல் -அமைச்சர் ரங்கசாமிக்கு எதிர்கட்சி தலைவர் சிவா கேள்வி

Published On 2023-10-19 08:25 GMT   |   Update On 2023-10-19 08:25 GMT
தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து சுதேசி மில் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழக மொழி பாடம் 4 பருவங்களாக உள்ளதை வெறும் 2 பருவங்களாக குறைக்கக்கூடாது.

பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை 8 மணி நேரமாக குறைக்கக்கூடாது. தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மாணவர்கள் போராட்டத்தை வாழ்த்தி புதுவை சட்டமன்ற எதிர்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:

தமிழ் மட்டும் படித்துவிட்டு இந்தியை கற்காததால்தான் நாம் கஷ்டப்படுவதாக உலகத்தை ஏமாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்போராட்டம் சவுக்கடி கொடுத்திருக்கிறது. உலக நாடுகள் மட்டுமின்றி பாராளு மன்றத்திலும் தமிழர்களின் பெரு மையை பேசினால்தான் பெருமை கிடைக்கிறது என பிரதமர் மோடிக்கு தெரிகிறது.

மொழி உணர்வோடு போராடும் மாணவிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். சட்டமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிக்கும். நம் மொழிக்கு, இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய கல்விக்கொள்கை இந்தியா முழுவதும் கொண்டு வந்தாலும், அந்தந்த மாநில அரசுதான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. முதல அமைச்சர் ரங்கசாமிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறதா? இங்கு நடப்பது ரங்கசாமி ஆட்சியா? பா.ஜனதா ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தத்தை வளர்க்க இங்குள்ள மக்கள் வாக்களிக்கவில்லை.

ரங்கசாமியை நம்பித்தான் வாக்களித்தார்கள். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்வர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News