புதுச்சேரி
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி வார்டுக்குள் கழிவு நீர் புகுந்தது:நோயாளிகள் அவதி
- கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது
- பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோயாளிகள் வார்டுகள் உள்ளது. நேற்று நள்ளிரவு பெண் நோயாளி கள் தங்கி இருந்த வார்டு ஒன்றில், கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது. இதனால் அவதியடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் வார்டில் புகுந்த கழிவுநீரை சுத்தம் செய்தனர். முழு மையாக வெளியேற்றாத கழிவுநீர் துர்நாற்றத்தில் நோயாளிகள் இரவு முழுவதும் அவதி யடைந்தனர். விடிந்தபிறகு, ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர்கள் வந்து முழுமையாக சுத்தம் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும் போது, நோயாளிகள் போட்ட குப்பைகள், கழிவு நீர் செல்லும் குழாயில் அடைத்து கொண்டதால், நீர் வார்டில் புகுந்துவிட்டது. அதிகாலை என்பதால், ஊழியர்கள் இல்லை. பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.