புதுச்சேரி

கோப்பு படம்.

காரைக்கால் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும்

Published On 2023-09-17 08:47 GMT   |   Update On 2023-09-17 08:47 GMT
  • முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
  • அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தர 5 ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புதுவை அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நான் எம்.பி.யாக இருந்த போது மத்திய அரசிடமிருந்து ரூ.47.76 கோடியில் மீன் பிடி துறைமுகம் உருவாக்க ப்பட்டது.

துறைமுகம் கட்டி 15 ஆண்டாகிறது. இப்போது அங்கு மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதனால் படகுகளை நிறுத்த முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. மீனவர்களி டையே கடும் போட்டி நிலவி, பிரச்சினைகள் எழுகிறது. எனவே துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது அவசியம். ஏலம் விடும் கூடம், தகவல் தொடர்பு மையம், மீன்வளத்துறை அலுவலகம், படகுகள் பழுதுபார்ப்பு மையம் அமைக்கலாம். மத்திய அரசு மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த பிரமதரின் மத்திய சம்பவதா என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

100 சதவீத மத்திய அரசு மானியத்துடன் காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தலாம். புதுவைக்கு வரும் மத்திய அமைச்சர்கள் உதவ தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, புதுவை அரசு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News