null
கடற்கரையில் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணிநேரத்தில் மீட்ட காவல்துறை
- போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
- குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.
புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.