ரூ.60 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள்
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்
- வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பாலம் முதல் சுல்தான்பேட்டை வழியாக கோபால்சாமி நாயக்கர் மண்டபம் வரை உள்ள புறவழிச்சாலையில் போடப்பட்டிருந்த சோடியம் மின்விளக்குகளை பொதுப்பணித்துறை மற்றும் வில்லியனூர் மின்துறையின் மூலம் ரூ.60 லட்சம் செலவில் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமை த்து 200 எல்.இ.டி. மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு புதிய எல்.இ.டி. விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வில்லியனூர் மின்துறை உதவிப் பொறியாளர் முருகேசன், இளநிலைப் பொறியாளர் பாலமுருகன், தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன்அ, அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது தாஹா, ஜனா, கிளைச் செயலாளர்கள் திலகர், மிலிட்டரி முருகன், சுப்ரமணி, வீரக்கண்ணு, முருகேசன், தட்சிணாமூர்த்தி, ஏழுமலை, ராஜ், மின்துறை கார்த்தி, பாலா, முத்து, அன்பு, கோதண்டபாணி, லட்சுமணன், ராஜ்முகம்மது, ஹாலிது, சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.