- ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் மனித உரிமை நிலை குறித்து நேரலையை புதுவையைச் சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு தமிழ்நாடு மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மற்றும் புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேரலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் மற்றும் ஜெரோம் சாம்ராஜ், முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் மனித உரிமை நிலை குறித்து நேரலையை புதுவையைச் சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு தமிழ்நாடு மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மற்றும் புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேரலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி புதுவை புவன்கரே வீதியில் உள்ள அகத்தியர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கருத்துரை வழங்கினர். மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர் மற்றும் ஜெரோம் சாம்ராஜ், முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மார்க்சிஸ்டு (எம்.எல்.) புருஷோத்தமன், விடுதலை சிறுத்தைகள் செழியன், தந்தை பெரியார் திராவிட கழகம் வீரமோகன், பி போல்ட் அமைப்பு பஷீர், மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், மக்கள் அதிகாரம் சாந்தகுமார் உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.