- கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.
- எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் சுற்றுச்சூழல் நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம், பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, கந்தன்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள இளைஞ ர்களால் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு, தினசரி மதிய உணவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, வள்ளலார் பிறந்த நாளான நேற்று மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
எவர்கிரீன் நிறுவனரும், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு துறை உறுப்பு செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு, அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலமாக, அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிராம பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.