சிவன் கோயிலுக்கு தீர்த்தவாரிக்கு மண்டபம்
- ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
புதுச்சேரி:
பாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆற்றுத் திருவிழா அன்று சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுவாமிகள் மேளதாளத்துடன் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆற்றில் 5 அஸ்திரங்களுக்கும் தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
பின்னர் ஆற்றங்கரையில் அருகே ஸ்ரீ மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நிலையில் சோரியாங்குப்பம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் வழியாக செல்ல வேண்டி இருந்ததால் அந்த கருங்கற்களால் ஆன மண்டபத்தை அகற்றி அதன் அருகில் உள்ள இடத்தில் புதிய மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இந்த பூமி பூஜையை பாகூர் தாசில்தார் பிரிதிவ், நிர்வாக அதிகாரி பாலமுருகன், ஆலய அர்ச்சகர், மணியகார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை பணியை தொடங்கி வைத்தனர். ஆனால் இதுவரை அம்மண்டபம் அகற்றப்படவில்லை.