மின்துறை அலுவலகத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முற்றுகை
- 40 பேர் கைது
- குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பாகூர் கொம்யூன் சார்பில் பாகூர் மின் இளநிலை பொறியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் கொம்யூன் செய லாளர் சரவணன் தலைமை தாங்கினார், பாகூர் கமிட்டி உறுப்பினர் அரிதாஸ், வடிவேலு ஆகியோர் முன்னி லை வகித்தனர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் பாகூர் கமிட்டி உறுப்பினர் கலைச்செல்வன், கிளை செயலாளர் முருகையன், சோரியங்குப்பம் கிளை செயலாளர் வெங்கடாசலம், பூங்காவனம், குருவிநத்தம் பெண்கள் கிளை செயலா ளர் வளர்மதி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மின்துறை தனியார்மயம், ப்ரீபெய்டு மீட்டர், ஸ்மார்ட் மீட்டர்திட்டத்தை கைவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டணத்தை பாதியாக குறைக்க கோரி இந்த போராட்டம் நடந்தது. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்ட னர்.