- கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு பேச்சு குறைபாடுகள் மற்றும் செவித்திறன் பிரிவின் இயக்குனர் ராஜன் தலைமை தாங்கினார். மும்பை, காது கேளாத மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், தேசிய மற்றும் பண்பாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் ஆலோசகருமான ரங்கசாமி கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பத்துடன் செய்ய வேண்டிய அவசியம் பற்றி பேசினார்.
புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார். மேலும் மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.