தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.
- கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.
இதில் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் துறை தலைவர்கள் கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேதியியல் துறையின் தலைவர் பேராசிரியை சாவித்திரி வரவேற்புரையாற்றினர். கலை மற்றும் அறிவியல் துறை தலைவர் டீன் முத்துலட்சுமி வாழ்த்துரை வங்கினார். வேலை வாய்ப்பு குறித்து தகவல்களை தொழில் துறை பயிற்சியாளர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.
கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார். முன்தாக வேதியியல் துறை பேராசிரியர் ராஜப்பா வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியை சரோஜ்பூரணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர் சிவராஜ் செய்திருந்தனர்.