அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம்-அமைச்சர் சந்தர பிரியங்கா வழங்கினார்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சண்முகம் தலைமையில் காரைக்கால் பகுதி நெடுங்காடு மனோன்மணி அம்மன் கோவில், பூவம் ஸ்ரீதளாதேவி கோவில், திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- ரங்கசாமி பிறந்தநாளில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தங்க நாணயங்கள் வழங்கினார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சண்முகம் தலைமையில் காரைக்கால் பகுதி நெடுங்காடு மனோன்மணி அம்மன் கோவில், பூவம் ஸ்ரீதளாதேவி கோவில், திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் காரைக்கால், திருப்பட்டினம், நெடுங்காடு பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெடுங்காடு தொகுதி குரும்பகரம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடை ந்தனர். கோட்டுச்சேரி, ராயன்பாளையம், பூவம் அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேனா இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் ரங்கசாமி பிறந்தநாளில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தங்க நாணயங்கள் வழங்கினார்.
நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து கேக் வெட்டி விமர்சையாக ரங்கசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.