புதுச்சேரி

வெள்ளை நிற பஞ்சுமிட்டாய்க்கு தடையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-02-18 07:21 GMT   |   Update On 2024-02-18 10:23 GMT
  • வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை.
  • நிறமி கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதனை பரிசோதித்தபோது பஞ்சுமிட்டாயில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்பது தெரியவந்தது.

தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தமிழக அரசு நேற்று தடை விதித்தது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

தடையை மீறி பஞ்சுமிட்டாயை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் நிறமி கலக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடையில்லை என தெரிவித்தார்.

நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நிறம் கலக்கப்படாத வெண்மை நிற பஞ்சுமிட்டாய் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News