புதுச்சேரி

கோப்பு படம்.

null

நவீன ஓட்டுநர் பயிற்சி - ஆராய்ச்சி மையம் - துணைநிலை கவர்னர் தமிழிசை ஒப்புதல்

Published On 2023-11-30 09:29 GMT   |   Update On 2023-11-30 10:00 GMT
  • புதுவை கவர்னர் தமிழிசை ஒப்புதல்
  • ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி நிலையங்களை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

புதுவையிலும் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தோடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளது. இதற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்க 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் கம்ப்யூட்டர், சென்சாருடன் இணைந்த இடத்தில் வாகனங்களை ஓட்டி உரிமம் பெற வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல், சிறிய தவறு செய்தாலும் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது.

புதுவையில் உள்ள அனைத்து பயிற்சி நிலையங்களும் இதன்கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

இங்கு கனரக ஓட்டுநர்க ளுக்கு முழுமையான என்ஜின் வாகன பழுது பார்ப்பு பயிற்சியும் அளிக்கப்படும். விரைவில் இடத்தை தேர்வு செய்து ஓட்டுநர் பயிற்சி, ஆராய்ச்சி மையத்ததை நிறுவ போக்கு வரத்து துறை தீவிரம் காட்டி வருகிறது.

Tags:    

Similar News