தேசிய அளவிலான கிராமிய நடன போட்டி புதுவை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
- . 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில மையத்தின் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் லாஸ்பேட்டையில் நடந்தது.
கிராமிய நடனத்திற்கான நடுவர்களாக திருமுருகன், பாரதியார் பல்கலைக்கூடத்தின் விரிவுரையாளர்கள் பாஸ்கர், வசந்த், பால்ராஜ், மனிஷ்குமார் ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். 4 பிராந்தியங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியின்போது மாணவர்களின் படைப்புகள் குறித்து நடுவர்கள் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் அளித்த பதிலின் அடிப்படையிலும், அவர்களின் கலை மற்றும் வாழ்வியல் திறன் அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்பாளர்கள் டெல்லியில் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியை மாநில பயிற்சி மையத்தின் சார்பில் சிறப்பு அலுவலர் கருணா சுகிர்தாபாய் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு வழங்கினார்.