வேளாண் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாம்
- முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மாணவர்களுக்கான நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நெட்டப்பாக்கத்தில் உள்ள ஆத்மா வேளாண் விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் சிறப்பு ஒரு நாள் இயல்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) முகாம் நடைபெற்றது.
இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயல்முறை மருத்துவ துறையின் பேராசிரியர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முகாமினை நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், ஏ.கே. ராவ் கெலுஸ்கர் ஒருங்கிணைத்தார். ரேவதி, மற்றும் சரோஜா உதவி பேராசிரியைகள் தேவி சாந்தினி, இந்துஜா, ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை சிறப்புற வழிநடத்தினர்.