- தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து “தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
- அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தமிழக அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக், கடலூர் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழினி சங்கம் இணைந்து "தமிழ் மருத்துவம் இனிய மருத்துவம்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
சகாயமேரி தலைமையில் சுசிலாதேவி முன்னிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மருத்துவ ஆய்வறிக்கையின் பொறுப்பாளரும் தி சுசான்லி அக்குபஞ்சர்-ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவருமான டாக்டர் உஷாரவி கலந்து கொண்டனர்.
இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும், அதனால் உடலுக்குக் கிடைக்கக் கூடிய பயன்களையும் எடுத்துரைத்ததுடன் மாணவிகளுக்கு அபாயக் கால முதலுதவிக்கான அக்குபிரஷர் புள்ளிகள் கற்றுக் கொடுத்தனர்.
முன்னதாக சிவகாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் கே. அன்னப்பூரணி மற்றும் புனிதவதி பேசினர். முடிவில் பி.அன்னப்பூரணி நன்றி கூறினார்.