புதுச்சேரி

கோப்பு படம்.

புதிய பஸ்களை வாங்கி இயக்க வேண்டும்

Published On 2023-05-07 06:18 GMT   |   Update On 2023-05-07 06:18 GMT
  • பி.ஆர்.டி.சி. ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
  • நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

புதுச்சேரி:

புதுவை சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலை ய்யன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை சாலை போக்கு வரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமும், போனஸ் தொகையும் வழங்கப்பட வில்லை. நிரந்தர ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கவில்லை.

உயர்த்தப்பட்ட டி.ஏ. தொகை 41 சதவீதம், 7-வது சம்பள கமிஷன் ஊதியக்குழு பரிந்துரைக்கான சம்பளம் மற்றும் 2 ஆம்கட்ட எம்.ஏ.சி.பி. 96 ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

4 பிராந்தியங்களுக்கும் சேர்த்து மொத்தம் 18 பஸ்கள் நிறுத்தப்பட்டு ள்ளன. அவை களுக்கு புதிய வாகனம் ஏற்பாடு செய்து உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 8 வண்டிகளுக்கு ரீ-பாடிகட்ட வேண்டும். கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு சேர்த்து சுமார் ரூ.27 கோடி அரசு நிதி ஒதுக்கியும் நிர்வாகம் எந்தவித பணியையும் அதற்காக செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

பி.ஆர்.டி.சி. கடன் வழங்கும் சங்கத்திற்கு கடந்த 7 ஆண்டு காலமாக நிர்வாக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து தொகையை செலுத்தாத காரணத்தினால், ஊழியர்களுக்கு கூடுதல் வட்டி 16 சதவீதம் போடப்பட்டு இறுதி கடிதங்களை சங்கம் அனுப்பிவருகிறது.

நிர்வாகம் அவ்வாறு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே சொசைட்டிக்கு செலுத்த வேண்டும். சொசைட்டி போட்ட வட்டி க்கு பி.ஆர்.டி.சி. நிர்வாகமே முழு பொறுப்பாகும். மேலும், நிலுவையில் உள்ள 2 மாத சம்பளம் மற்றும் போனஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், துறை செயலர் மற்றும் மேலாண் இயக்கு நருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News