- புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.
- இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.
தற்போது பண்டிகை காலம் என்பதால் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வழி இல்லாமல், வணிக நிறுவன ஊழியர்களின் வாகனங்களின் பின்னால் 2-ம் வரிசையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் நிறுத்த தடை இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள கடை ஊழியர்கள் தங்களது வாகனங்களை கடைகளின் முன் விடாமல், பழைய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவில் விட வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆயினும் இதுவரை அந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.
இதனையடுத்து நேரு வீதி வணிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பழைய சிறைச்சாலையில் விடுவதற்கு பார்க்கிங் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது வாகனங்களை நிறுத்தி, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, முதல் வணிக நிறுவனஊழியர்கள் வாகனங்களை கடை முன்பு நிறுத்த கூடாது. பொதுமக்கள் மட்டும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், துணை உதவி ஆய்வாளர் வேணுகோபால் ஆகியோர் இன்று ஒவ்வொரு கடையாக சென்று ஊழியர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் அவர்கள், வாகனங்களில் செல்லும்போது தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.