புதுச்சேரி

கோப்பு படம்.

அன்பழகன் மீது ஓம்சக்தி சேகர் குற்றச்சாட்டு

Published On 2022-11-11 05:26 GMT   |   Update On 2022-11-11 05:26 GMT
  • கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள்.
  • ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்?

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள். அதுபோல இப்போது புதுவை அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை கொச்சைப்படுத்தும் வகையில் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பேசி வருகின்றனர்.

நான் எடப்பாடியை தவறாக விமர்சிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஜெயலலிதாவின் உண்மை தொண்டன் என போற்றப்பட்டவர் ஒ.பி.எஸ். ஜெயலலிதா இருந்த போதும், மறைந்த பிறகும் ஓ.பி.எஸ். போன்ற தொண்டரை அ.தி.மு.க. கண்டதில்லை. அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதை ஒருகாலும் ஏற்க முடியாது.

ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்? எடப்பாடியே ஓ.பி.எஸ்சை ஏற்றாலும் நான் ஏற்க மாட்டேன் என அவர்களால் கூற முடியுமா?

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3 பேர் வெற்றி பெற்றோம்.

முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி பதவியேற்ற போது அமைச்சர் பதவிக்காக என்னை காங்கிரசில் சேர அன்பழகன் வற்புறுத்தினார். அப்போது நான் மறுத்துவிட்டதால் அன்பழகன் காங்கி ரசில் இணைவது தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக கிரண்பேடியை அன்பழகன் எதிர்த்து வந்தார். தற்போது ரங்கசாமிக்கு ஆதரவாக தற்போதைய கவர்னரை புகழ்ந்து வருகிறார். ஓ.பி.எஸ்.சிடம் அன்பழகனை போல பலன் பெற்றவர்கள் யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News