புதுச்சேரி

கடற்கரை சாலையில் தூய்மை பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் பிரமுகர்கள் உள்ளனர்.

புதுவை கடற்கரை சாலையில் ஒரு மணி நேர தூய்மை பணி

Published On 2023-10-01 08:39 GMT   |   Update On 2023-10-01 08:39 GMT
  • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
  • திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணியை" முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக புதுவை அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை மராத்தான் போட்டி கடற்கரை சாலையில் இன்று நடந்தது.

 இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ரொக்க பரிசினை வழங்கினார்.

ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

தொடர்ந்து தூய்மையே சேவை இருவார நலப்பணியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மை பணிக்கு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News