பார்வையற்றோருக்கு வாசிப்பு மையம் திறப்பு
- புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
புதுவையில் பார்வையற்றோர்கள் ஒன்றிணைந்து பார்வையற்றோருக்கான புதுவை உதவும் இதயங்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு அன்னே சல்லிவன் பெயரை கொண்ட வாசிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் முன்னிலை வகித்தார். மையத்தின் தலைவர் கிறிஸ்டோபர் பிரசாந்த், முன்னாள் தலைவர் சதீஷ்குமார், பி.எஸ்.என்.எல். அனிதா, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியைகள் சந்தானலட்சுமி, கல்பனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் ஜெயக்குமார், விஜயபிரசாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் நிர்வாக உறுப்பினர்கள் தீனா, சந்தோஷ், சுபாஷ், வினோத், முகேஷ், ராம்பிரசாத், ஹரினி, தர்ஷிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த வாசிப்பு மையத்தில் பார்வையற்றோருக்கு அனைத்து வசதிகளும், அதற்கு தேவையான புத்தகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.