பேச்சுவார்த்தையில் உடன்பாடு - சிறுமியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்
- புதுச்சேரி நகர் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து, புதுச்சேரி நகர் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முதல்வர் ரங்கசாமி வரும்போது சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமியின் சடலம் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், நியாயம் கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுமியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் உடலை பெற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்து சிறுமியின் உடல் எடுத்துச் செல்லப்படவுள்ளது.