பர்வதவர்த்தினி ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா
- சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
- தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்றது.
முன்னதாக பிடாரியம்ம னுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலா, இந்திர விமானம், அதிகார நந்தி, பூத வாகனம், கற்பக விருட்சம், நால்வர் வீதியுலா, யானை வாகனம், குதிரை வாகனம், பிட்சாடனர் திரு வீதியுலா, ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் வீதியுலா நடைபெற்றது.
பின்னர் பர்வதவர்த்தினி ராமலிங்கேஷ்வரருக்கு திருக்கல்யாணம் நடை பெற்றதை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் வைத்திலிங்கம் எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊர் பிரமுகர் பிரகாசம் ஆகி யோர் கலந்துகொண்டனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்தனர். தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.