காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடக் கூடாது
- அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தல்
- கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை போலீஸ் தலைமையக அலுவலக கட்டிடத்தை புனரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை போலீஸ் தலைமையகம் 200 ஆண்டு பழமையானது. கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையம் பேக்கரியில் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்ட- ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.
போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து விடக்கூடாது என அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளேன்.
அனுமதியின்றி இயங்கும் சுற்றுலா படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர காவல்பிரிவுக்கு தேவையான படகுகள் வாங்கவும், பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.