காட்டுக்குப்பம் ஏரிகரை மேம்படுத்தியதில் பனைவிதை நடவு
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதிக்குட்பட்ட காட்டுக்குப்பம் தாங்கல் ஏரியைதூர்வாரி, கரைகளை சீரமைத்து, பாக்கியலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழை நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார், தனியார் நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியின் மூலமாக காட்டுக்குப்பம் ஏரியை கரைகளை சீரமைத்திட முன் வந்தது.
இதையடுத்து ரூ.4.10 லட்சம் செலவில் ஏரிக்கரை கரைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதி சுற்றிலும் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் சுகுமார், மனிதவள துறை பொது மேலாளர் சோன் செரியன், முதன்மை அதிகாரி விவேக் கண்ணன், கலந்து கொண்டு பனை விதை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜன், இளநிலைப் பொறியாளர் நடராஜன், காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகர் குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏரியின் கரையை மேம்படுத்தி தந்த செந்தில்குமார்
எம்.எல்.ஏ.மற்றும் தனியார் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்தனர்.