புதுச்சேரி

என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினர். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம்.


இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் மோடி செயல்படுகிறார்

Published On 2023-10-26 09:43 GMT   |   Update On 2023-10-26 09:43 GMT
  • முதல்- அமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
  • நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

புதுச்சேரி:

என் மண், என் தேசம் நிகழ்ச்சியில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு அமுத பெருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்பதற்காக என் மண், என் தேசம் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

என் மண், என் தேசம் என்ற வார்த்தையை சொல்லும்போதே தேசப்பற்று வர வேண்டும். புனித கலசம் மூலம் நாட்டின் அனைத்து பகுதி மண்ணும் கலக்கப்பட்டு டெல்லியில் நிறுவப்படுகிறது.

நாட்டின் அனைத்து மண்ணும் கலந்த பூங்கா அமைக்கும்போது நாட்டின் ஒற்றுமை வெளிப் படும். பல மொழி, இனம், அதிக மக்கள் தொகை கொண்டது இந்திய நாடு. எத்தனை வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுதான் நம் நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பிரதமரின் உணர்வு நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் உள்ளது.

இன்று இந்தியநாடு உலகில் சிறந்த நாடாக திகழ்கிறது. பிரதமர் சிறந்த தலைவராக திகழ்கிறார். உலகில் எந்த நிகழ்வாக இரு ந்தாலும் நம் பிரதமர் ஆலோசனை வழங்கும் நிலையில் உள்ளார். நம் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் வழிநடத்தி செல்கிறார்.

புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. கல்வியில் 100 சதவீத தன்னிறைவு பெற்ற மாநிலமாககொண்டு வந்துள்ளோம். சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்துள்ளோம்.

ஆன்மிகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் இந்திய குடிமகன்கள் அனைவரும் ஒற்றுமையோடு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News