புதுச்சேரி

குச்சிப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையில் ஒரு மரத்தில் கூடு கட்டியுள்ள விஷ குளவிகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் விஷ குளவி கூடுகள்

Published On 2023-09-14 05:22 GMT   |   Update On 2023-09-14 05:22 GMT
  • பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர்.
  • அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி:

குச்சிபாளையம் பகுதியில் மதகடிப்பட்டு-திருக்கனூர் செல்லும் சாலையில் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷ குளவிகள் அங்குள்ள ஆலமரத்தில் 2 இடங்களில் கூடு கட்டி உள்ளது.

இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர். மேலும் திருபுவனை, சன்னியாசி குப்பம் ஆகிய பகுதி மக்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

அவ்வப்போது விஷக்குளவிகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News