புதுச்சேரி

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து டிராக்டர் ஓட்டி சென்ற காட்சி.

காலாப்பட்டில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2023-09-21 09:34 GMT   |   Update On 2023-09-21 09:34 GMT
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
  • 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தியை யொட்டி பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் 20 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

18-ந் தேதி தொடங்கி சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டது. தினமும் ஆன்மீக சொற்பொழிவு பெண்க ளுக்கு கோல போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழு சார்பில், நெசல், கொடூர், வில்வநத்தம், சின்ன காலப்பட்டு, பிள்ளை சாவடி, தலகாணிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி 3-ம் நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வமாக எடுத்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் செல்லியம்மன் நகரில் ஒன்றிணைந்தது. பெரிய விநாயகர் முன்பு செல்ல மற்ற ஊர்களில் இருந்து வந்த விநாயகர் அனைத்தும் பேரணியாக வாகனங்களில் வந்தது.

விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவையின் பொருளாளர் கண்ணன் தலைமையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அவர் 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

பேரணியாக வந்த விநாயகர் சிலைகள் பங்களா வீதி வழியாக புதுவை காலாப்பட்டு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

20 அடி உயரமுள்ள விநாயக சிலை தத்ரூபவமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை நிர்வாகிகளும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News