புதுச்சேரி

சுற்றுலா பயணிகளை கவரும் புத்தாண்டு: கொண்டாட்ட நகரமாக மாறிய புதுச்சேரி

Published On 2023-12-26 04:51 GMT   |   Update On 2023-12-26 04:51 GMT
  • சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
  • டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் பெருகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாடுவதற்காகவே பல நாடுகளில் பல்வேறு நகரங்களை சுற்றுலா பயணிகள் தேர்வு செய்கின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நகரங்கள் உலகளவில் புத்தாண்டு கொண்டாடும் நகரமாக உள்ளது.

இதேபோல இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிகளவில் கோவாவை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

ஆனால் கடந்த சில ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக சுற்றுலா பயணிகளை புதுவை கவர்ந்துள்ளது.

டிசம்பர் மாத இறுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது பலமடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிகின்றனர்.

இந்த காலகட்டத்தில் புதுவை குளிரான கோடை வாசஸ்தலம் போல உள்ளது. இதுவும் சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்க்கிறது.

டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்ட், ஓட்டல் களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு திட்டமிட தொடங்குகின்றனர். டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவும் தொடங்குகிறது. விடுதி அறைகளுக்கும் முன்பதிவு தீவிரமாக உள்ளது.

புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.

புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டை வரவேற்கும் டிசம்பர் 31-ந் தேதி மாலை தொடங்கி முதல் இரவு 12 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இது மட்டுமின்றி அரசின் சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு குழாம், பழைய துறைமுக வளாகத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதுவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை களிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தயாராகி வருகிறது.

புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு புதுவையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக புதுவை மாறியுள்ளது.

Tags:    

Similar News