புதுச்சேரி

உலக கிக்பாக்ஸிங் போட்டியில் புதுவை மாணவனை செல்வகணபதி எம்.பி. பாராட்டிய காட்சி.

null

புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவன் சாதனை

Published On 2022-11-19 05:55 GMT   |   Update On 2022-11-19 05:59 GMT
  • இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.
  • இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .

புதுச்சேரி:

இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.

போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில், 34 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கணைகள் கலந்து கொண்டனர் அதில் புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவன் பவித்ரன் கலந்து ெகாண்டு சப்-ஜூனியர் பிரிவில் 1 தங்க பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்று புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .

இதனை கவுரவிக்கும் வகையில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் எம்.பி.யுமான செல்வகணபதி, முதன்மை முதல்வர் பத்மா ஆகியோர் மாணவன் பவித்ரனை பாராட்டினார்கள்.

Tags:    

Similar News