புதுச்சேரி

அமலோற்பவம் கல்வி குழுமம் சார்பில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் வென்ற பள்ளிக்கு முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ கோப்பை வழங்கிய காட்சி.

அமலோற்பவம் கல்வி குழுமம் சார்பில் வினாடி-வினா போட்டி பரிசளிப்பு விழா

Published On 2023-11-25 04:42 GMT   |   Update On 2023-11-25 04:42 GMT
  • சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
  • இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

புதுச்சேரி:

புதுச்சேரி அமலோற்ப வம் கல்வி குழுமம் சார் பில், 14-ம் ஆண்டு பள்ளி களுக்கு இடையேயான வினாடி- வினா போட்டி நடந்தது.

சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை என இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. இளநிலை பிரிவில் செயின்ட் பேட்ரிக் பள்ளி முதலிடமும், பெத்தி செமினார் பள்ளி2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.முதுநிலை பிரிவில் பெத்தி செமினார் பள்ளி முதலிடமும், தி ஸ்டெடி பள்ளி 2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடம் பிடித்தன.

அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

Tags:    

Similar News